வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:45 IST)

முதல்வரின் சகோதரி தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு

sharmila
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில்  காங்கிரஸ், பாஜக, தெலங்கான ராஷ்டிரிய சமிதி  உள்ளிட்ட கட்சிகள்  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக அதிரடி கருத்துகளை கூறி வரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.