வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:16 IST)

நியுசிலாந்து அணிக்கு முக்கிய வீரர் விலகலால் பின்னடைவு!

இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகளில் நியுசிலாந்தும் ஒரு அணியாக உள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோற்றுள்ளது. அடுத்தடுத்து வரும் போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமான போட்டியாக அமைய உள்ளன.

இந்நிலையில் அந்த அணியின் முக்கிய பவுலர் மேட் ஹென்ரி தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் விரைவில் நியுசிலாந்தில் இருந்து இந்தியா வந்து அணியுடன் இணைவார் என சொல்லப்படுகிறது.