வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:54 IST)

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமான நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டவிரோதமான முறையில் அண்டை நாடுகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவது அதிகரித்து வருகிறது.

அதன்படி, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 பேர் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதில், 30,010 பேர் கனடா நாட்டு வழியாகவும், 41770 பேர் மெக்சிகோ வழியாகவும் எல்லை தாணி நுழைய முயன்ற பெரும்பாலானோர் குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது.