திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:51 IST)

'INDIAN IS BACK'- சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய உலகநாயகன்

Rajini Kamal
இந்தியன் 2 பட  இன்ட்ரோவை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ததற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ பட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்தியன் படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் இதன் ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில்,  இந்தியன் 2 பட  இன்ட்ரோவை இன்று மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார் என்று லைகா நிறுவனம் தெரிவித்தது. அதன்படி இன்று ரஜினி, இந்தியன் 2 இன்ட்ரோவை ரிலீஸ் செய்தார்.

அதேபோல் இந்தியன் பட இந்தி இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் அமீர்கானும், மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் மோகன் லாலும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், தெலுங்கில்  ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் ராஜமெளலி வெளியிட்டனர்.

இந்த வீடியோவில் இந்தியன் இஸ் பேக் என்பது போன்று  கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதியாக கம்பீரமாக நடித்துள்ளார். அவரது தோற்றமும் பேச்சும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படத்தில் சித்தார்த், மனோபாலா, உள்ளிட்டோ நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த  நிலையில்,  நடிகர் சூப்பர் ஸ்டார் இந்த இன்ட்ரோவை ரிலீஸ் செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் ‘’ எனது அருமை நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிக்கு  நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்- ஷங்கர் கூட்டணியில் 2 வது படமாக உருவாகி வரும் இந்தியன் 2 பட ஷீட்டிங்கின்  போதே இந்தியன் 3 ம்  பாகமும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.