ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (00:16 IST)

’’Tik Tok ’’க்கு போட்டியாக ’’சிங்காரி’’ ஆப்…லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் !

சீன செயலியான டிக் டாக் இன்றைய சமூக வலைதளத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள் டிக்டாக் செயலியில் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். இதில் நடிகர், நடிகைகள், நட்சத்திர விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர்..
 

இந்நிலையில், இதற்குப் போட்டியாக பெங்களூர் புரோகிராமர்ஸ் சிங்காரி என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியை பெங்களூரை சேர்ந்த பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமின் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இதில் வீடியோ பதிவிறக்கம் பதிவேற்றம் செய்துடன் நண்பர்களுக்கு மெசேஸ், சாட்டிங் செய்யவும் வசதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது