புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (15:23 IST)

இப்படி தான் திருத்துவோம்... டாடிக்கு மேல பேசும் உதயநிதி!

10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு வரவெற்பு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். 
 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் முதல் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 தேர்வு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இதற்கான இறுதி விசாரணை நாளை மறுநாள் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார்.
 
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதேபோல உதயநிதி ஸ்டாலினோ, இப்படித்தான் உங்களை திருத்துவோம் என பதிவிட்டுள்ளார். இதனோடு, 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. இது, வெற்றி கிடைக்கும்வரை இக்கோரிக்கையை அரசு, நீதிமன்றம், மக்கள் மன்றம் என தொடர்ந்து எடுத்துசென்ற கழக தலைவர் அவர்களுக்கும், இளைஞரணி-மாணவரணியினருக்கும், ஆசிரியர்-மாணவர்-பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.