செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (09:13 IST)

பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்: முதல்வர் பழனிசாமி இரங்கல் டுவீட்

முதல்வர் பழனிசாமி இரங்கல் டுவீட்
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 62
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது திமுகவினர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ இவர்தான் என்பது குறிப்பிடத்தகக்து