1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (23:14 IST)

மரணம் எப்படி இருக்கும்? டிக் டாக் வீடியோ எடுத்தவர் பலி !

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கவுரகானஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் தனஞ்ஜெய் (25) .இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவர் டிக்ட்டாக்கில் அவ்வப்போது விடியோக்கள் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைப் பெற வேண்டி பூச்சி மருந்த வாங்கிக் குடித்துள்ளார்.அதை வீடியோ எடுத்து  டிக் டாக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

சிறிதுநேரத்தில் விஷத்தின் கொடூரத்தை உணர்ந்த அவர் தான் இறக்கப்போவதை நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.