1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (09:20 IST)

உக்ரைன் போன தைரியத்துல தைவான் வந்துடாதீங்க! – ஜோ பைடனுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உக்ரைனுக்கு பயணம் செய்தது குறித்து சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாகிவிட்டது. ரஷ்யாவின் இந்த அத்துமீறிய போரை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கண்டித்து வருகின்றன. ஆனால் சீனா இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எந்த முன்னறிவிப்பும் இன்றி ரகசியமாக பயணம் செய்து உக்ரைன் சென்று வந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் பயணம் ரஷ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீனாவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


சீனாவும் தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என கூறி சமீப காலமாக பிரச்சினை செய்து வருகிறது. முன்னதாக அமெரிக்க செனட் உறுப்பினர் தைவானுக்கு பயணித்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைன் சென்ற ஜோ பைடன் ”இன்று உக்ரைன்.. நாளை தைவான்” என மறைமுகமாக பேசியதாக தெரிகிறது.

அதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ள சீனா “போரில் தொடர்புடைய சில நாடுகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும். சீனா மீது வெறுப்பை திணிப்பதையும், “இன்று உக்ரைன் நாளை தைவான்” என சீனாவுடன் வம்பு செய்வதையும் நிறுத்த வேண்டும்” என பெயர் குறிப்பிடாமல் எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K