அமெரிக்கா, கனடாவை அடுத்து சீனாவிலும் மர்ம பலூன்.. அனுப்பியது யார்?
அமெரிக்கா மற்றும் கனடாவில் சமீபத்தில் மர்மமான பலூன் பறந்ததை அடுத்து தற்போது சீனாவிலும் மர்ம பலூன் பறந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மர்மமான பலூன் பறந்தது. அதை அந்நாட்டு ராணுவம் சூட்டு வீழ்த்தியது. அது சீனாவுக்கு சொந்தமான உளவு பலூன் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கனடாவிலும் சமீபத்தில் மர்ம பலூன் பறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்கா கனடாவை அடுத்து தற்போது சீனாவில் உள்ள குயின்டோவா என்ற மாவட்டத்தின் கடல் பகுதியில் மர்மமான பலூன் ஒன்று பறந்ததாகவும் அதை சுட்டு வீழ்த்த சீன அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva