1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:48 IST)

இளைஞரின் திருமணத்தின்போது 7 முன்னாள் காதலிகள் போராட்டம்

china
சீன நாட்டின் யுனான் மாகாணத்தில் நடந்த இளைஞரின் திருமணத்தின்போது, முன்னாள் காதலிகள் வந்து போராட்டம்  நடத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான சீனாவில் ஜி ஜிங்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு, தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் வசிப்பவர் சென். இவருக்கு கடந்த 6 ஆம் தேதி திருமணம் நடந்தது.

இத்திருமணத்தில்  சென் வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருகை புரிந்தனர்.

மகிழ்ச்சியாக நடந்த திருமணத்தின்போது, சில இளம்பெண்கள் சூழ்ந்து கொண்டு, மணமகனுக்கு எதிராக குரல் எழுப்பி அவர்களின் கையில் பதாகைகள் வைத்திருந்தனர்.

இதுகுறித்து, உறவினர்கள் அப்பெண்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள்,  பெண்களைக் காதலித்தால், அவர்களை ஏமாற்றாதீர்கள்… அவர்கள் உங்களை பழிவாங்க முடிவெடித்தால் என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, என் சிறுவயதில் அவர்களைக் காதலித்துப் பிரிந்தேன்…. காதலியை ஏமாற்றக்கூடாது என்று மணமகன் மனம் வருந்தித் தெரிவித்துள்ளார்.