வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (11:05 IST)

சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை..

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இன்று காலை விசாரணை நடத்திய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது.

கிட்டதட்ட 2 மணி நேர விசாரணைக்கு பிறகு தற்போது அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.