செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:55 IST)

இவர்கள் கோட்சேவுக்கே பாரத ரத்னா கேட்பார்கள்! – டி.ராஜா குற்றச்சாட்டு

மஹாராஷ்டிர தேர்தல் அறிக்கையில் பாஜக சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க முன்மொழிவதாக தெரிவித்துள்ளது. அதை சுட்டிக்காட்டிய டி.ராஜா “பாஜக கோட்சேவுக்கு பாரத ரத்னா கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாஜக இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்க தீவிரமாக ஆய்வு செய்து தங்கள் தேர்தல் அறிக்கைகளை வடிவமைத்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர தேர்தல் அறிக்கையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க முன்மொழிவதாக குறிப்பிட்டுள்ளது பாஜக. இதுகுறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா “ மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை நாடே கொண்டாடி வரும் நிலையில், அவரது கொலை வழக்கில் ஒரு குற்றவாளியான சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்துவது மிகப்பெரிய முரணாகும். இன்று சாவர்க்கருக்கு பாரத ரத்னா கேட்பவர்கள், நாளை காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கே பாரத ரத்னா கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று கூறியுள்ளார்.

சாவர்க்கருக்கு பாரத ரத்னா பரிந்துரைக்கப்படும் இந்த விவகாரம் இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.