1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Checking made though in Kerala Tamil Nadu border

தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

கேரளா
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் வாளையாறு எல்லையில் குவிந்து வருகின்றனர். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதனைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் எதிரொலியாக 2 வது நாளாக தொற்று குறைந்து நேற்று 19,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  மேலும் 132 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர், 2 லட்சத்து 9 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் வாளையாறு எல்லையில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து மாணவர்கள் வருகையால் வாளையாறு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash