1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (16:21 IST)

அனைத்தையும் துறந்தவர்களுக்கானது காவி உடை! தீபிகா படுகோன் எதைத் துறந்தார்? முதல்வர் கேள்வி

அனைத்தையும் துறந்தவர்களுக்கானது காவி உடை! தீபிகா படுகோன் எதைத் துறந்தார்? முதல்வர் கேள்வி
அனைத்தையும் துறந்தவர்களுக்கானது காவி உடை என்றும் தீபிகா படுகோனே எதைத் துறந்தார் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஷாருக்கான் தீபிகா படுகோன் நடித்த ’பதான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடலில் காவி உடை அணிந்த தீபிகா படுகோனே ஆபாசமாக தோன்றியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் என்பவர் காவி உடை என்பது அனைத்தையும் துறந்தவர்களுக்கானது என்றும் தீபிகா படுகோனே காவி உடை அணியும் அளவிற்கு எதை துறந்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
உணவுக்காக குண்டர்கள் காவி உடை அணிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பொதுமக்களிடமிருந்து பணத்தை பிடுங்கியதை தவிர பொது மக்களுக்காக அவர்கள் எதை தியாகம் செய்தனர் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran