கிறிஸ்துமஸ் கொண்டாடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! – அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்த பள்ளி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில் பள்ளி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பள்ளி வளாகத்தில் காத்திருந்த நிலையில், திடீரென துப்பாக்கியோடு அப்பகுதியில் நுழைந்த ஆசாமி மாணவ, மாணவிகள் மீது சராமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடம் விரைவதற்குள் ஆசாமி தப்பி ஓடியுள்ளான். துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடந்த இந்த துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit By Prasanth.K