திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (22:55 IST)

அமெரிக்காவில் தொங்கு பாலத்திலிருந்து குதித்து இந்திய சிறுவன் தற்கொலை!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய சிறுவன் ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ என்ற  நகரில் உள்ள கோல்டன் கேட் என்ற தொங்கு பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றிப் பார்க்க வருவர்.

இங்கு வந்து தற்கொலை செய்து கொள்ளுபவர்களும் அதிகம். கடந்த  90 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்திய சிறுவன் தொங்கு பாலத்தில் இருந்து நேற்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்றோர் மகனை இழந்து கதறி அழுதனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.