ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (09:42 IST)

மோடியினால் தான் விக்ரம் லேண்டர் சரியாக இறங்கவில்லை…சர்ச்சையை கிளப்பிய முன்னாள் முதல்வர்

மோடியினால் தான் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கவில்லை என கர்நாடகவாவின் முன்னாள் முதல்வர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின், விக்ரம் லாண்டர் கடந்த சில நாட்களுக்கு முன் தரையிறக்கப்பட்டபோது, நிலவுக்கு 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு லேண்டர் எங்கிருக்கிறது என்று ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது லேண்டரில் இருந்து தகவல் பெறுவதற்கு இஸ்ரோ முயன்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மைசூரில் பேட்டியளித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ”பிரதமர் மோடி, இஸ்ரோவில் கால் அடி எடுத்து வைத்த நேரம் அங்கிருந்த விஞ்ஞானிகளுக்கும், சந்திரயான் 2 விண்கலத்திற்கும் அபசகுணம் ஏற்பட்டதா? என தெரியவில்லை. அதனால் தான் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கவில்லை” என கூறியுள்ளார். மேலும் மோடி இஸ்ரோவுக்கு வராமல் இருந்திருந்தால், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டரிலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவலை பெற முயன்றுகொண்டிருக்கும் தருணத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, மோடி வருகையால் தான் விக்ரம் லேண்டர் தரையிறங்கவில்லை என கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.