வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:04 IST)

ஒரு லட்டு 17 லட்ச ரூபாய்! – ஏலத்தில் வாங்கிய விவசாயி!!

ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு 17 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

ஐதராப்பாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு பாலாப்பூர் மக்கள் கிலோக்கணக்கில் பிரம்மாண்டமான லட்டு செய்து விநாயகருக்கு படைப்பது வழக்கம். இந்த முறையும் 21 கிலோ கொண்ட பெரிய லட்டு செய்து விநாயகருக்கு படைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலையை கரைத்த பிறகு இந்த ராட்சத லட்டு ஏலத்திற்கு விடப்படும். இந்த லட்டை ஏலத்தில் வாங்கிவிட பலர் போட்டி போட்டு கொள்வார்கள். இந்த லட்டுவை ஏலத்தை வாங்குபவர்களுக்கு தொல்லைகள் நீங்கி, செல்வம் பெருகும், தொழில் வளமடையும் என்பது அவர்களது நம்பிக்கை.

இந்த முறை விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்ட நிலையில் லட்டுக்கான ஏலம் தொடங்கியது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஏலத்தில் பாலாப்பூர் விவசாயி கோலன் ராம் ரெட்டி என்பவர் 17 லட்ச ரூபாய்க்கு இந்த லட்டுவை ஏலத்தில் பெற்றார். சென்ற ஆண்டு ஏலத்தில் லட்டு 16 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.