1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (10:48 IST)

சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்கியது!!!

சந்திராயன்-2 விண்கலம் புறப்படுவதற்கான 20 மணி நேர ’கவுண்டவுன்’, இன்று அதிகாலை தொடங்கியது.

நிலவில் ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 2008 ஆம் ஆண்டு, சந்திராயன் -1 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. அந்த ஆய்வுகளின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதை தொடர்ந்து தற்போது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செயவதற்காக, சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

சந்திராயன் 2 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு விண்னில் பாய்கிறது. மேலும் இந்தியாவின் கணமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டபாதையில் சந்திராயன்-2 செலுத்தப்படும். அதன் பின்னர் நிலவின் சுற்று வட்டபாதைக்கு அந்த விண்கலம் மாறும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த சுற்றுவட்டப்பாதையில் நிலவை சென்றடைவதற்கு 45 நாட்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தின் ‘ரோவர்’ என்னும் வாகனம் தரை இறக்கப்பட்டு  சோதனையில் ஈடுபடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.வி,சிவன், நாளை மழை பெய்தாலும், சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும் எனவும், அதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

சந்திராயன்-2 விண்கலம், புறப்படுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை 6.51 மணிக்கு தொடங்கியது. மேலும் நாளை சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டவில் வின்ணில் ஏவப்படுவதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வரிலால் ப்ரோஹித், ஆந்திரா கவர்னர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் பார்வையிடுகின்றனர்.