புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (13:23 IST)

ராக்கெட் விடுவதற்கு முன் சாமி தரிசனம் – திருப்பதியில் இஸ்ரோ சிவன்

மங்கல்யான் 2 திங்கட்கிழமை புறப்பட இருக்கும் நிலையில் இன்று திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் கனவு திட்டமான மங்கல்யான் 2 தயாராகி வருகிறது. நிலவில் இதுவரை எந்த நாடுகளும் கால்பதிக்காத தென் துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மங்கல்யான் விண்கலம் வரும் ஜூலை 15ல் விண்ணில் பாய இருக்கிறது. இதை உலக நாடுகளே மிகவும் ஆவலோடு எதிர்நோக்கி காத்துள்ளன.

இந்நிலையில் இன்று திருப்பதி கோவிலுக்கு சென்ற இஸ்ரோ தலைவர் சிவன் ஏழுமலையானை தரிசித்து திரும்பியிருக்கிறார். தனது சொந்த வேண்டுதல்களுக்காக சென்றாரா அல்லது மங்கல்யான் 2 வெற்றிகரமாக விண்வெளியை சென்று சேர வேண்டும் என வேண்டிவந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.