தொடர்புடைய செய்திகள்
- தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர தயார்: ராம்தாஸ் அத்வாலே தகவல்
- தமிழ்நாட்டில் பாஜகவின் கணக்கு இதுதான்! இதோ சொல்லிட்டாருல்ல மத்திய அமைச்சர்!
- 1000 ரூபாய கொடுத்து அதிமுக பலத்த ஏத்திகுட்டோம்!!! உண்மையை ஒப்புக்கொண்ட சைண்டிஸ்ட் அமைச்சர்
- காங்.எம்எல்ஏ-க்கள் தங்கிய விடுதி விதிமீறல்: ரூ.982கோடி அபராதம் செலுத்த உத்தரவு
- இதுவொரு துண்டு கட்சிகளின் பேரணி: மம்தா, ஸ்டாலினை கலாய்த்த மத்திய அமைச்சர்
இந்து பெண்கள் மீது கை வைத்தால் வெட்டி எறியுங்கள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்து பெண்கள் மீது கை வைத்தால் அவர்கலின் கைகளை வெட்டி எறியுங்கள் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜக அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பாஜக மேலிடம் இவ்வாறு பேசக்கூடாது என எவ்வளவு கூறினாலும் இவர்கள் கேட்டபாடில்லை.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மாதாபுராவில் இந்து அமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் இந்துபெண்கள் மீது கை வைத்தால் அவர்களின் கைகளை வெட்டி எறியுங்கள் என ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அமைச்சர் ஏற்கனவே இதே போல் பல சர்ச்சைக் கருத்துக்க்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
