செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (19:12 IST)

இதுவொரு துண்டு கட்சிகளின் பேரணி: மம்தா, ஸ்டாலினை கலாய்த்த மத்திய அமைச்சர்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில் நாளை இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளின் கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி ஒன்றும் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த பேரணியை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலாய்த்துள்ளார். கொல்கத்தாவில் நாளை நடக்கவுள்ள பேரணி, துண்டு கட்சிகளின் பேரணியே என்றும் இதுவொரு மெகா கூட்டணியல்ல என்றும் தெரிவித்துள்ள பொன் ராதாகிருஷ்ணன், 'திமுகவிற்கு கொல்கத்தாவில் ஓட்டுவங்கி இருக்கிறதா? திரிணாமுல் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஓட்டுவங்கி உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக இருக்கும் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும், குறைந்தபட்சம் 30 இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும் என்றும் பிரதமரின் தமிழக வருகைக்கு பின் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.