ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தின் 100வது நாளான நேற்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி காலை பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இதுவரை 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறை அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.