1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central govt says vaccine has be sent

தடுப்பூசி தட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு!

மத்திய அரசு
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல். 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  
 
இரண்டாம் அலை பீதியால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 38,18, 97, 610க்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
காலை நிலவரப்படி மாநிலங்களில் 36, 48, 77, 756 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மாநிலங்கள் வசம் 1,70, 19, 854 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
பத்மபிரியா திமுகவில் ஐக்கியம்… இணைய உபிக்கள் அதிருப்தி!