புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (11:14 IST)

பத்மபிரியா திமுகவில் ஐக்கியம்… இணைய உபிக்கள் அதிருப்தி!

மக்கள் நீதிமய்யத்தில் இருந்து விலகிய பத்மபிரியா நேற்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

டிக்டாக் மூலமாக பிரபலமானவர் பத்மபிரியா. இவர் தனது புகழின் மூலம் மக்கள் நீதிமய்யத்தில் இணைந்து பதவிகளையும் பெற்றார். அதுமட்டுமில்லாமல் மத்திய சென்னை தொகுதி சட்டமன்ற வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு 30000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் நேற்று ஐக்கியம் ஆகியுள்ளார். ஆனால் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்த போது அவரின் கருத்துகளை கடுமையாக மறுத்து அவரை ஆஃபாயில் என்று விமர்சித்த இணைய உடன்பிறப்புகள் இப்போது அப்செட் ஆகியுள்ளனராம்.