இந்தியர்கள் சிலர் இன்னும் உக்ரைனில்... மத்திய அரசு பகீர்
15 முதல் 20 இந்தியர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கியுள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கி இருந்தனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வந்தனர்.
இந்நிலையில் 15 முதல் 20 இந்தியர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கியுள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணி இன்னமும் முடியவில்லையென்றும், மீட்பு பணி தொடரும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.