சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்தது ரஷ்யா!
உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து சர்வதேச உக்ரைன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆம், ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டில் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியது.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.