1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:47 IST)

ரஷ்யா - உக்ரைன் போரில் 14,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் மரணம்!

ரஷ்யா - உக்ரைன் போரில் இதுவரை 14,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவ தளபதி தகவல். 
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு மாத காலம் நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தாக்குதல் நடத்தி கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் இறந்துள்ள நிலையில், பலர் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அகதிகளாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷ்ய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போரில் இதுவரை 14,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவ தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.