வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (12:02 IST)

தடுப்பூசிகள் குறித்த கணக்கை வெளியிட்ட மத்திய அரசு!

மத்திய அரசு தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
கொரோனா குறைவதற்கு தடுப்பூசி போடும் பணிகளும் முக்கிய பணிகள் ஆற்றியது. இந்நிலையில் மத்திய அரசு தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 
 
மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1.51 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 32.59 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.