1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூலை 2021 (08:44 IST)

சென்னை வந்தது 5 லட்சம் தடுப்பூசிகள்: இன்று முதல் மீண்டும் முகாம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினால் சென்னை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் இயங்கவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று இரவு மத்திய அரசு தமிழகத்திற்கு 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பியதாக தகவல் வெளிவந்த நிலையில் அந்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து இந்தத் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று முதல் மீண்டும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி மையம் செயல்படும் என்று கூறப்படுகிறது
 
தமிழக அரசின் சுகாதாரத்துறை மத்திய அரசுடன் வலியுறுத்தியதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு தற்போது 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் கோவாக்சின் தடுப்பூசிகள் வர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
தற்போது தான் தமிழகத்தில் தடுப்பூசி போடும் போடுவதில் மக்கள் ஆர்வத்துடன் உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்