செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (09:16 IST)

இந்த தடுப்பூசிகளை கலந்து போட்டால் கொரோனாவுக்கு தீர்வு!? – ஆய்வில் கண்டுபிடிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பல்வேறு வேரியண்டுகள் பரவியுள்ள நிலையில் குறிப்பிட்ட இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவதால் கொரோனா பாதிப்பிலிருந்து மீளலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டாவின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்குரியதாக கருதப்பட்ட நிலையில் தற்போது லாம்ப்டா வைரஸ் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி குறித்து தாய்லாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சினோவக் தடுப்பூசி ஒரு டோசும், ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியில் ஒரு ரோஸும் கலந்து போட்டுக் கொண்டால் அது டெல்டா மற்றும் ஆல்பா வைரஸுக்கு எதிராக 90 சதவீதம் திறனுடன் செயலாற்றுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தாய்லாந்து நாட்டில் தடுப்பூசிகளுக்கு தொடர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.