1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Govt relaxes Corona restrictions

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய மத்திய அரசு!

கொரோனா
இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கின. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டது. 
 
ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. விமான நிலையத்திலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
35.03% வாக்குகள் பதிவு: உத்தரபிரதேச தேர்தல் நிலவரம்!