1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:38 IST)

சென்னையில் ராக் வித் ராஜா… மார்ச்சில் இளையராஜாவின் இசைக் கச்சேரி!

இசைஞானி இளையராஜாவின் புதிய இசைக் கச்சேரி சென்னையில் மார்ச் மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இப்போது முன்புபோல அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருக்கும் இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் ராக்வித் ராஜா என்ற பெயரில் லைவ் கான்செர்ட் நடக்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இந்த கச்சேரியை மெர்க்குரி மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்த உள்ளன. தேதி, இடம் மற்றும் டிக்கெட் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.