1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central govt order for corona virus

கொரோனா பரிசோதனை: அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

corona
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
அந்த வகையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் கொரோனா  தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா நடத்திய ஆலோசனையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
65.88 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!