வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (13:02 IST)

வாரத்தில் 3 நாள் விடுமுறை - புதிய ஊதிய விதிகள்!!

அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. 
 
இந்த புதிய ஊதிய விதிகளின் படி ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 
 
1. ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.
 
2. வாரத்திற்குக் குறைந்தது 48 மணி நேரம் ஊழியர் ஒருவர் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை. 
 
3. ஊழியர்களின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
 
4. உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 300 நாட்கள் வரை விடுமுறை. 
 
5. புதிய ஊதிய சட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும்.
 
6. புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
7. சமுக பாதுகாப்புக்காக எல்லா சம்பள வடிவங்களிலும் பிஎப் இணைக்கப்படும்.