வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (11:22 IST)

ஒரு மாதத்தில் 30 லட்சம் கணக்குகள் நீக்கம்! – வாட்ஸப் தகவல்!

இந்தியாவின் புதிய சமூக வலைதள கட்டுப்பாடுகளை ஏற்றப்பின் 30 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி சமூக வலைதளங்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை தாங்கள் பெற்ற புகார்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

அவ்வாறாக தற்போது வாட்ஸப் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில் ஜூலை 16ம் தேதி முதல் 31 வரையிலான காலகட்டத்தில் 594 குறைதீர் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 30 லட்சம் வாட்ஸப் கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.