திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (06:59 IST)

சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களாக தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சமையல் சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்ந்து வருவது பொது மக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விலை இன்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது
 
சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டு ரூபாய் 900.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் 285 உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்
 
அதேபோல் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 75 உயர்ந்து ரூ.1831.50 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூபாய் 25 உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் உள்பட அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்