பொது நுழைவுத்தேர்வால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது: மத்திய அரசு
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு வைப்பதால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உரிமை பாதிக்கப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்தபோது மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உரிமை பாதிக்கப்படாது என்றும் பல்வேறு நிபுணர்களுடன் விரிவான கலந்தாய்வு செயல்முறைக்கு பிறகு பொது நுழைவுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது