செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ஐந்து மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: மத்திய அரசு எச்சரிக்கை

corona
5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
அரியானா உத்திரபிரதேசம் டெல்லி மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மாநில நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
நாடு முழுவதும் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டுமொரு ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது