வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:12 IST)

நுழைவுத்தேர்வு விவகாரத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய முடிவு: மாணவர்கள் மகிழ்ச்சி

entrance
நுழைவுத் தேர்வு விவகாரத்தில் மத்திய பல்கலைக்கழகம் புதிய முடிவை எடுத்துள்ளதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மத்திய பல்கலைகழகங்களில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
 
இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் இதுவரை ஒரே ஒரு முறை தேர்வு மட்டுமே நுழைவுத்தேர்வு எழுதி அதில் கிடைத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர்.
 
இந்த நிலையில் 45 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் இரண்டு நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் என்றும் இதில் எதில் அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளதோ, அதன் அடிப்படையில் மத்திய பல்கலைகளில் சேர முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்