வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:22 IST)

பால் கறக்க மாட்டேங்குது.. என்னான்னு விசாரிங்க! – எருமை மீது புகார் அளித்த பால்காரர்!

மத்திய பிரதேசத்தில் தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக பால்க்காரர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தின் நாயாகன் பகுதியை சேர்ந்த பால்க்காரர் பாபுலால் ஜாதவ். இவரிடம் உள்ள எருமை மாடுகளில் ஒன்று கடந்த சில நாட்களாக பால் கறக்க விடாமல் மக்கர் செய்து வந்துள்ளது. இதனால் கடுப்பான பால்க்காரர் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று தன் மாட்டுக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீஸார் இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும். இதனால் கடுப்பான பால்க்காரர் தனது எருமை மாட்டை நேரடியாக காவல் நிலையத்திற்கே கொண்டு வந்து நியாயம் கேட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் கால்நடை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை சரி செய்ய கேட்டுக் கொண்டார்களாம். இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.