1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (16:16 IST)

டெல்லியில் அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்? முழு ஊரடங்கா?

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் டெல்லியில் காற்று மாசுபாடால் ஊரே புகைமண்டலமாக காட்சி தருவது தொடர்கிறது.

இந்நிலையில் டெல்லியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திங்கட்கிழமை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.