தொடர்புடைய செய்திகள்
- 10 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!
- தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது! – ஸ்வீடன் அதிரடி உத்தரவு!
- தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?
- கொரோனா 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?
9ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் அவ்வப்போது தமிழக அரசு நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது என்பதும் இதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் இதில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இதுவரை முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும் வதாகவும் அவர் கூறியுள்ளார்
