1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central govt advised for 144 in states

தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!

144 தடை உத்தரவு
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து இரவு நேர ஊரடங்கு முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் பிறப்பித்து கொண்டு வருகின்றன. இதையும் மீறி தினமும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இன்னும் வைரஸின் சீரியசை உணரவில்லை என்று கூறப்படுகிறது 
 
மேலும் வெளியே வரும் பலர் இன்னும் மாஸ்க் அணியாமல் வருகின்றனர் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர் என்றும் அதனால் தான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவித்தலை அடுத்து எத்தனை மாநிலங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
அடுத்த கட்டுரையில்
சனி, ஞாயிறு நாட்களில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி!