திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (10:49 IST)

எஞ்சிய ஆக்ஸிஜனை எங்களுக்கு கொடுத்து உதவுங்கள்! – மாநில அரசுகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்!

டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ள நிலையில் மாநில அரசுகளிடம் உதவி கேட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியுடனான காணொலி சந்திப்பின்போது டெல்லிக்கு ஆக்ஸிஜன் வேண்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “அனைத்து மாநில முதவல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில், உள்ளூர் தேவை போக எஞ்சியவற்றை டெல்லிக்கு கொடுத்து உதவிடுங்கள். மத்திய அரசு எங்களுக்கு உதவியபோதும், அந்த ஆக்ஸிஜன் எங்களுக்கு போதுமானதாக இல்லை.” என்று கூறியுள்ளார்.