திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (12:02 IST)

சிலிண்டர் விலை ரூ.915.50-ஐ தொட்ட கதை!!

சமையல் சிலிண்டர் விலை இம்மாதம் ரூபாய் 15 உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 915.50 என விற்பனையாகி வருகிறது. 
 
ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை சமையல் சிலிண்டர் விலை ரூ.215.50 உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ரூ.710 ஆக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் ரூ.75 கூடி ரூ.785 ஆகவும், மார்ச் மாதத்தில் ரூ.50 உயர்ந்து ரூ.835 ஆகவும் அதிகரித்தது.
 
ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.825 விலைக்கு விற்கப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் விலை உயர்த்தப்படாமல் அதே விலையே நிர்ணயம் செய்யப்பட்டது. ஜூலை மாதத்தில் ரூ.25.50 உயர்ந்து சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக அதிகரித்தது.
 
கடந்த 3 மாதமாக ரூ.25-க்கு சமையல் கியாஸ் விலை உயர்த்தது.  சமையல் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் நெருங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே ஆகும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.