புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (07:50 IST)

’தங்கம்’ பதுக்கியவர்களுக்கு பொது மன்னிப்பு: மத்திய அரசின் புதிய திட்டம்!

கருப்பு பணத்தில் தங்கம் வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ளது 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது பெரும்பாலான கருப்பு பண முதலைகள் தங்கத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் அந்த கருப்பு பணத்தில் வாங்கிய தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு தற்போது ‘தங்கம் பொதுமன்னிப்பு திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது 
 
இந்த திட்டத்தின்படி கருப்பு பணத்தில் வாங்கிய தங்கத்தை கணக்கில் காட்டி, அதற்குரிய வரியை செலுத்தி கருப்பு பணம் அல்லாத தங்கமாக வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி கருப்புப் பணத்தில் வாங்கிய சுமார் 25 முதல் 30 டன் எடையுள்ள தங்கத்திற்கான வரி கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது 
 
ஆனாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஒரு சில சிக்கல்கள் எழலாம் என்பதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னாக தங்க முதலீட்டாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் தங்க நகை வியாபாரிகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது