தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!
- இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்
- நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!
- வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!
- வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!
வியட்நாம் விவசாயிகளை விரட்டியடித்த ட்ரம்ப்! கோல்ஃப் க்ரவுண்ட் கட்ட திட்டம்!
வியட்நாமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்திற்காக கோல்ஃப் மைதானம் அமைக்க விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் நிலம் அரசின் உரிமையாக உள்ள நிலையில் அதில் விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். நிலம் தொடர்பான உரிமை சார்ந்த முடிவுகளை அரசு மட்டுமே எடுக்க முடியும்.
இந்நிலையில் அமெரிக்கா - வியட்நாம் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹங் யென் மாகாணத்தில் 990 ஹெக்டேர் நிலத்தில் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலம் விவசாயிகள் பயன்படுத்தி வரும் நிலமாக உள்ள நிலையில், அவர்களுக்கு சொற்ப பணமும், ரேசன் பொருட்களும் அளித்து வெளியேற்றப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது.
Edit by Prasanth.K
