திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (15:46 IST)

அடேங்கப்பா ! ’கல்கி பகவான்’ ஆசிரமத்தில் ரூ. 500 கோடி ரொக்கம் பறிமுதல்...தங்கம், வைரம் ..

புகழ்பெற்ற கல்கி பகவானுக்கு சொந்தமான 40 ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாள் சோதனையில் ரூ. 44 கோடி பணத்தை பதுக்கியதையும், ரூ. 500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததுள்ளதையும் ஐடி துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் கல்கி பகவான் ஆசிரமும் ஒன்று. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள இந்த ஆசிரமத்திற்கு சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் 40 கிளைகள் உள்ளன.
 
இந்நிலையில் கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரி துரையினர் கடந்த 16 ஆம் தேதி ஒரே நாளில் கல்கி ஆசிரமத்தின் அனைத்து கிளைகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததையும் கண்டுபிடித்தனர்.
 
நேற்று இரண்டாவது நாலாக ஐடிதுறையினரின் அதிரடி சோதனை தொடர்ந்த நிலையில் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
 
இந்நிலையில் இன்று மூன்றாவது கல்கி பகவானின்  மஜ்க் நாளாக சோதனை நடைபெற்றபோது, இந்திய ரூபாய் மதிப்பில் 43.9 கோடி ரூபாயும், அமெரிக்க டாலர் மதிப்பில் 2.5 மில்லியன் டாலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
43.கொடி இந்தியப்பணம், ரூ. 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள்  , மற்றும் 26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கள், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகளும் பறிமுதல் செய்துள்ளனர் ஐடிதுறையினர்.
 
மேலும், கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ரூ. 500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்துள்ளது ஐடிதுறை.